Thursday, October 1, 2026
Homeசெய்திகள்தமிழகத்தில் 40,296 அரசு வாகனங்களுக்கு புதிய சலுகை! RC செல்லுபடியாகும் காலம் 2035 வரை நீட்டிப்பு!

தமிழகத்தில் 40,296 அரசு வாகனங்களுக்கு புதிய சலுகை! RC செல்லுபடியாகும் காலம் 2035 வரை நீட்டிப்பு!

தமிழகத்தில் அரசுத் துறைகள், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களின் பதிவுச் சான்றிதழ் (RC) செல்லுபடியாகும் காலத்தை மேலும் நீட்டித்துத் உள்துறை (போக்குவரத்து-4) துறை அரசாணை [G.O.(Ms).No.326, நாள்: 29.09.2026] வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் மோட்டார் வாகன விதிகளின்படி 15 ஆண்டுகள் நிறைவடைந்த அரசு வாகனங்களின் பதிவை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை மற்றும் அரசுப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்கத் தமிழக அரசு தொடர்ந்து அவற்றுக்கு விலக்கு அளித்து வருகிறது. அந்த வகையில், 2026 செப்டம்பர் 30-டன் முடிவடையும் 40,296 அரசு வாகனங்களின் பதிவுச் சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை 2035 செப்டம்பர் 30 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் (RTO) மூலம் 40,296 வாகனங்களின் பதிவுச் சான்றிதழை 2027 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கவும், கையாலேயே (Manual) தகுதிச் சான்றிதழ் (FC) புதுப்பித்தல் மற்றும் வரிகளை வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments