Home செய்திகள் தமிழக அரசு அதிரடி! 2,339 அரசு டெண்டர்கள் ரத்து – முறைகேடுகள் மீது கடும் நடவடிக்கை!

தமிழக அரசு அதிரடி! 2,339 அரசு டெண்டர்கள் ரத்து – முறைகேடுகள் மீது கடும் நடவடிக்கை!

தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற மே 10 ஆம் தேதி முதல் ஜூலை 17 ஆம் தேதி வரையிலான குறுகிய காலத்திற்குள் நகராட்சி, பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, போக்குவரத்து, கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசுத் துறைகளில் மொத்தம் 2,339 டெண்டர்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட இந்த டெண்டர்களில் முறைகேடுகள் மற்றும் முறையற்ற விநியோகங்கள் நடந்ததாக எழுந்த தொடர் புகார்களை அடுத்தே, தற்போதைய அரசால் இந்த அதிரடித் திரும்பப் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு ரத்து செய்யப்பட்டவற்றுள் 253 பணிகளுக்கு ஏற்கனவே மறு டெண்டர்கள் விடப்பட்டுள்ள நிலையில், அதே நேரத்தில் 10,560-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன என்பதும், இதில் பெரும்பாலானவை முந்தைய தி.மு.க. ஆட்சியில் வெளியிடப்பட்ட டெண்டர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version