Sunday, March 15, 2026
HomeUncategorizedபா.ஜ.கவில் நடிகர்களுக்கு புது கட்டுப்பாடு

பா.ஜ.கவில் நடிகர்களுக்கு புது கட்டுப்பாடு

பா.ஜ.க ஓ.பி.சி நலப்பிரிவு மாநில பொது செயலாளராக இருப்பவர் திருச்சி சூர்யா. இவர் தி.மு.கவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவாவின் மகன். சமீபத்தில்தான் திருச்சி சூர்யா மற்றும் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டெய்சி சரண் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறி ’ஆடியோ’ ஒன்று வெளியாகி உள்ளது.

டெய்சியிடம் மிக ஆபாசமாக பேசும் சூர்யா  இறுதியில், ‘உன்னை தீர்த்துடுவேன்’ என கொலை மிரட்டல் விடுக்கிறார். இந்த ஆடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாக்கப் பட்டு வருகிறது.  அதே நேரத்தில் அதில் ’பேசுவது சூர்யாதானா’ என்பது  இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் பா.ஜ.க ஊடகப்பிரிவு தலைவர் ரங்கா கட்சியில் இருக்கும் நடிகர், நடிகை கள் அனைவருக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ‘கட்சி தலைமை அனுமதியின்றி  யூடியூப் உட்பட எந்த மீடியாக்களுக்கும் யாரும் பேட்டி தரக்கூடாது. அப்படி மீறுபவர்கள் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள்’ என தெரிவித்து இருக்கிறார்.

முதற்கட்ட நடவடிக்கையாக, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் நடிகை காயத்ரி ரகுராம் பா.ஜ.கவில் இருந்து இன்று  நீக்கப்பட்டார். .

இதனிடையே, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம். 

சூர்யா சிவாவை கண்டிப்பாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும்; தமிழ்நாடு முதலமைச்சர் சூர்யா சிவா மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் கருத்து தெரிவிக்கும் போது மரியாதையையும் கண்ணியத்தையும் ஒற்றுமையையும் கடைபிடிக்க வேண்டும்.

கட்சி பிரச்சினை ஏதாவது வரும் பட்சத்தில் அதை மாநில தலைமையின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய முறையில் பிரச்சனையை முடித்துக் கொள்ள வேண்டும்.மத்திய அரசின் நலத்திட்டங்கள் வளர்ச்சி திட்டங்கள் போன்றவற்றை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதில் கவனம் செலுத்த வேண்டும். திமுக அரசின் தவறான ஆட்சியை மக்களிடம் கொண்டு செல்வதிலும் ஈடுபட வேண்டும்  என சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு பாஜக இணை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments