Home Uncategorized தங்க மயில் விருதுக்கான போட்டிக்கு தேர்வான தி கோட் லைப், ஆர்டிகள் 370, ராவ்சாஹேப் படங்கள்

தங்க மயில் விருதுக்கான போட்டிக்கு தேர்வான தி கோட் லைப், ஆர்டிகள் 370, ராவ்சாஹேப் படங்கள்

தி கோட் லைப், ஆர்டிகள் 370, ராவ்சாஹேப் ஆகிய இந்திய படங்கள் தங்க மயில் விருதுக்கான போட்டிக்கு தேர்வாகி இருக்குது.

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 55-வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் வருகிற 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. விழாவில் இந்தியாவில் இருந்து பல மொழி நடிகர்-நடிகைகள் பங்கேற்க உள்ளனர்.முதல் படமாக ரந்தீப் ஹூடா நடித்த சாவர்க்கர் படம் திரையிடப்படுகிறது.

இந்தியன் பனோரமா திரைப்பட விழாவில் 20 திரைப்படங்கள் திரையிட தேர்வாகியுள்ளது. இதில் தமிழில் இருந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மட்டுமே தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உருவானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காய்ங்க.

தங்க மயில் விருதுக்கான போட்டியில் 3 இந்திய படங்கள் உள்பட 15 படங்கள் தேர்வாகியுள்ளன. 12 வெளிநாட்டு படங்களும் இதில் அடங்கும். .இந்தாண்டு தங்க மயில் விருதுக்கான நடுவர் குழுவில் இந்திய இயக்குநர் அஷ்டோஷ் கோவாரிக்கர், சிங்கப்பூர் இயக்குநர் ஆண்டனி சென், ஆங்கில-அமெரிக்கன் தயாரிப்பாளர் எலிசபெத் கார்ல்சென், ஸ்பானிஷ் தயாரிப்பாளர் பிரான் போகியா, ஆஸி. எடிட்டர் ஜில் பில்காக் இருக்கிறார்கள்.

இந்த நடுவர் குழுவினர்தான் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், நடிகைகளை தேர்வு செய்வார்கள். வெற்றி பெருபவர்களுக்கு ரூ.40 லட்சம் பரிசு

தங்க மயில் விருதுக்கான போட்டியில் உள்ள படங்கள்

ஈரான் – பியர் டிரெம்ப்லிங், Fear & Trembling (Iran) துருக்கி – குலிஜார், Gulizar (Turkey) பிரான்ஸ் -ஸ்பெயின் – ஐ ஏம் நெவேன்கா, I am Nevenka (Spain) அமெரிக்கா – பனோப்டிகான், Panopticon (Georgia-USA) சிங்கப்பூர் – பியர்ஸ், Pierce (Singapore) துனிசியா – ரெட் பாத், Red Path (Tunisia) கனடா -பிரான்ஸ் ஷெப்பர்ட்ஸ், Shepherds (Canada-France) ரோமானியா – தி நியூ இயர் தட் நெவர் கம், The New Year That Never Came (Romania) லிதுனியா – டாக்ஸிக், Toxic (Lithuania) சீக் ரிபப்ளிக் – வேவ்ஸ், Waves (Czech Republic) துன்சியா- கனடா – ஊ டூ ஐ பிளாங் டூ, Who Do I Belong To (Tunisia-Canada) இந்தியா – தி கோட் லைப், ஆர்டிகள் 370, ராவ்சாஹேப். The Goat Life, Article 370, Raavsaheb (India)

Exit mobile version