Thursday, March 5, 2026
HomeUncategorizedதங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்: புதிய விதி இன்று முதல் அமல்

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்: புதிய விதி இன்று முதல் அமல்

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் அனைத்திலும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற புதிய விதிமுறை  இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தங்க நகைகளை விற்கும்போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. முதல்கட்டமாக நாடு முழுவதும் 256 மாவட்டங்களில் அமலுக்கு வருகிறது.

தங்க நகை விற்பனையாளர்கள் இனி 14, 18 மற்றும் 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும். மேலும் இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றான ஹால்மார்க் முத்திரையும் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். 

இந்த புதிய முறையை கடந்த ஜனவரி மாதமே நடைமுறைப்படுத்துவது என 2019ம் ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா சூழல் காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments