தனுஷ் இயக்கிய “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” (NEEK) படத்தின் 4வது பாடலான “புள்ள” தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து பாடிய இந்த பாடலின் வரிகளை தனுஷ் எழுதியுள்ளார். முன்னதாக வெளியான “கோல்டன் ஸ்பேரோ” மற்றும் “யெடி” பாடல்கள் வைரலான நிலையில், “புள்ள” பாடலும் ரசிகர்களிடம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இத்திரைப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

