Skip to main content

தொழில் நுட்பத்துறையில் கோலோச்சும் இந்தியர்கள்!!

மகிழ்ச்சியும் பெருமிதமும்
     உலகின் முன்னணி டிஜிட்டல் நிறுவனங்களில் இந்தியர்களின் பங்கு மிகப்பெரியது. குறிப்பாக இன்று டிஜிட்டல் துறையில் ஜாம்பவான்களாக இருக்கும் கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம், அடோப், விஎம்வேர் உள்ளிட்ட நிறுவனங்களின் இந்தியர்கள் தான் தலைமை நிர்வாக அதிகாரிகளாக உள்ளனர். அந்த பட்டியலில் தற்போது ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியாக ஒரு இந்தியரே நியமிக்கப்பட்டுள்ளார்.
 இப்படி தொழில் நுட்பத் துறையில் இந்தியர்களின் பங்கு என்பது மிகப்பெரியது. இதனால் திறன்மிக்க வெளி நாட்டினரை அமெரிக்கா தக்க வைத்துக் கொள்கிறது. இந்திய திறமைகளால் அமெரிக்கா பெரிதும் பயனடைகிறது என்றும் எலான் மஸ்க் இந்தியர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

 யார் இந்த பரக் அக்ராவல்?
    பரக் அக்ராவல் இந்தியாவில் ஐஐடி மும்பையில் இளங்கலை படித்தவர், அமெரிக்காவின் ஸ்டோன்போர்டு பல்கலைக் கழக்கத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றார். 2011ம் ஆண்டில் ட்விட்டரில் தனது பணியினை தொடங்கிய பரக், இன்று தனது திறமையால் தலைமை செயல் அதிகாரியாக முன்னேறியுள்ளார்.

 கூகுளின் சிஈஓ சுந்தர் பிச்சை 
   உலகின் டெக் ஜாம்பவான்களில் ஒருவரான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆவார். மதுரையில் பிறந்து வளர்ந்த சுந்தர் படித்தது சென்னையில். இன்று கூகுள், ஆல்பாபெட் நிறுவனங்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறார். இவர் கடந்த 2015ம் ஆண்டில் ஆல்பாஃபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

  யார் இந்த சத்ய நாதெள்ளா?
  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான சத்ய நாதெள்ளா, ஹைத்ராபாத்தில் பிறந்தவர். மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். இவர் கடந்த 2014ம் ஆண்டில் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர், கடந்த ஜூன் மாதமே தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

  ஐபிஎம்மின் அர்விந்த் கிருஷ்ணா 
   ஏப்ரல் 2020ம் ஆண்டு முதல் ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வரும் அர்விந்த் கிருஷ்ணா, ஆந்திராவில் பிறந்தவர். இவர் 1990ல் இருந்து தனது பணியினை ஐபிஎம்மில் தொடங்கினார். படிப்படியான முன்னேற்றம் கண்டு இன்று தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.

  யார் இந்த சாந்தணு நாராயண்?
   அடோப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சாந்தணு நாராயண், இவர் ஹைத்ராபாத்தில் பிறந்தவர். உஸ்மானியா பல்கலைகழகத்தில் இளங்கலை படித்த சாந்தணு, அமெரிக்காவில் முதுகலை படிப்பினை பெற்றார்.