Thursday, March 5, 2026
HomeUncategorizedதோனி வீட்டிற்கு சென்ற வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி

தோனி வீட்டிற்கு சென்ற வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி

இந்திய அணியின் முன்னாள் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி ஆகியோர் தோனியின் ராஞ்சி வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அவரது பைக், கார் கலெக்‌ஷன்களை பார்த்து பிரமித்துபோயுள்ளனர்.

பின்னர் இதுதொடர்பான 1.49 விநாடிகள் ஓடும் விடியோவையும் வெங்கடேஷ் பிரசாத் பகிர்ந்துள்ளார். அத்துடன் தனது டுவிட் பதிவில், “நான் பார்த்ததில் மிகவும் வெறித்தனமான மனிதர் என்றால் அது தோனிதான்.

சிறந்த சாதனையாளராக மட்டுமில்லாமல் நம்பமுடியாத நபராக உள்ளார். அவரது ராஞ்சி வீட்டில் வைத்திருக்கும் பைக் மற்றும் கார்களின் கலெக்‌ஷன்கள்.

அவரது ஆர்வம் மிரண்டுபோக செய்துள்ளது.” தோனியன் பைக் கலெக்‌ஷன்களின் ஹார்லி டேவிட்சன், கவாசாகி நிஞ்ஜா எச்2, டுகாட்டி 1098, யமஹா ஆர்டி350, சுஸூகி ஹயாபுசா உள்பட 50க்கும் மேற்பட்ட பைக்குகள் இடம்பிடித்துள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments