Thursday, March 5, 2026
HomeUncategorizedதர்ப்பணத்திற்குச் சிறந்த திருவல்லம்..!

தர்ப்பணத்திற்குச் சிறந்த திருவல்லம்..!

ஆன்மா:
”மானிடர் ஆன்மா மரணம் எய்தாது… மறுபடி பிறந்திருக்கும்… ” கீதையில் பகவான் கிருஷ்ணரின் வாக்கு. 
உடலுக்குத்தான் அழிவு. ஆன்மாவிற்கில்லை. ஆனாலும், தனது ஒவ்வொரு பிறப்பிலும் இயற்கையாகவோ அல்லது அகாலமான மரணித்தின் மூலமோ தனது பயணத்தை முடித்துக்கொள்ளும் ஆன்மா உண்மையில் சாந்தியடைய வேண்டும். அப்படியில்லையெனில், அது துர்சக்தியாக மாறவோ அல்லது நிலையற்ற கதியோடு அலைகின்ற அவலநிலைக்கோ தள்ளப்படும். இதனால் அந்த ஆன்மா (பித்ரு) தான் பிறப்பெடுத்த மானிட வம்சத்தில் உள்ள தனது குலத்தின் வழித் தோன்றல்களுக்கு பிரச்சைனையாக இருக்கும். இந்த நிலையைத் தவிர்க்கவே சனாதன தர்மமானது ““பித்ருக்களுக்கு தர்ப்பணம்” செய்ய வலியுறுத்துகிறது. 

ஏன் தர்ப்பணம்?:
இந்த பித்ரு தர்ப்பணமானது மாத்ரு காரகனான சந்திரனும், பிருகாரகனான சூரியனும் இணையும் ஒவ்வொரு அமாவாசையன்றும் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் உடலைவிட்டு நீங்கிய ஆன்மாவானது, சாந்தி பெறுகிறது. அப்படி சாந்தமடைவதால் தன் சந்ததிகளுக்காக இறைவனிடத்தில் நமக்காக பிரார்த்திக்கிறது. அது மட்டுமின்றி, அவை சாந்தி பெறுவதால் அவற்றின் வாழும் தலைமுறை புண்ணியத்தினை ஈட்டுகிறது. ஆகவே அமாவாசையன்று சடங்கு சம்பிரதாயங்களுடன் விரதம் மேற்கொண்டு, பயபக்தியுடன் விரதம் மேற்கொண்டு தர்ப்பணம் செய்வது அவசியமாகிறது. 

எங்கெல்லாம் தர்ப்பணம் தரலாம்?: 
    தொன்றுதொட்ட காலம் முதல் கடற்கரை, நதிக்கரை, குளக்கரை என நீர்நிலைகளின் அருகிலேயே தர்ப்பணம் செய்வது வழக்கம். அவை இல்லாத ஊர்களின் வாழ்வியலுக்கு ஏற்றவாறு தர்ப்பணம் செய்கின்றனர். 
    அதேபோல் இதற்கென பிரசித்திப்பெற்ற ஒருசில திருத்தலங்கள் உள்ளன. அங்கு சென்று உரிய வழிபாட்டு முறைகளை மேற்கொண்டு தர்ப்பணம் செய்வதால் கிடைத்தற்கரிய பலன்கள் பெறுகின்றனர். அத்தகைய திருத்தலங்களில் ஒன்றுதான் இன்றைய கேரள மாநிலத்தில் உள்ள “பரசுரமர் திருக்கோயில்” .

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments