Skip to main content

தருமபுர பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்க முடியாது

மனிதனை மனிதனே பல்லக்கில் தூக்குவதை ஏற்க முடியாது எனவும், தடை விதிக்க கோரியும் எழுந்த மனுவை ஏற்று தருமபுர பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு பேரூராட்சி சார்பில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் தருமபுர பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்க முடியாது என சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசினார். 

மேலும் தடையை நீக்கவும் கோரிக்கை வைத்து உள்ளார்.

தருமபுர ஆதின பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். 

அதன் மீது பேசிய அவர், தருமபுர ஆதின பட்டின பிரவேச நிகழ்ச்சி 500 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. 

பல்லக்கு தூக்குபவர்கள் ஆதினத்தை சேர்ந்தவர்களே என்பதால் தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தருமபுரம் ஆதீன பல்லக்கு பட்டினப் பிரவேசத்தை பாஜக நடத்திக்காட்டும்; நானே ஆதீனத்தை பல்லக்கில் சுமக்க தயார். - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு