Home Uncategorized ‘புன்னகை தேசம்’ தருண் மீண்டும் சினிமாவில் என்ட்ரி

‘புன்னகை தேசம்’ தருண் மீண்டும் சினிமாவில் என்ட்ரி

தமிழில் ‘புன்னகை தேசம்’, ‘எனக்கு 20 உனக்கு 18’ படங்களின் மூலம் பிரபலமான நடிகர் தருண் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஒரு வெப் சீரிஸில் நடிக்கிறார்.

இயக்குநர் மணிரத்னத்தின் ‘அஞ்சலி’ படத்தின் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானவர் தருண்.  அதன் பின்னர்,  ‘புன்னகை தேசம்’, ‘எனக்கு 20 உனக்கு 18’  ’காதல் சுகமானது’ உள்ளிட்ட படங்களின் நடித்து தமிழில் தனக்கென ஒரு ரசிகர்களை பெற்றுள்ளார். பின்னர் இவர் நடித்த சில படங்கள் தோல்வியை சந்தித்தன. இதனால், திரையுலகை விட்டு நீண்டகாலமாக ஒதுங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது வெப் சீரிஸ் ஒன்றின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் தருண். இதனை அவரது தாயாரும் நடிகையுமான ரோஜா ராஜாமணி பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். தெலுங்கில் உருவாகி வரும் ஒரு வெப் சீரிஸில் தற்போது தருண் நடித்து வருவதாகவும், இது தவிர மற்றொரு படத்திலும் அவர் ஹீரோவாக ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும் அவர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

Exit mobile version