Wednesday, February 4, 2026
Homeவணிகம்தேயிலை ஏற்றுமதி தேக்கம்!

தேயிலை ஏற்றுமதி தேக்கம்!

 இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஜனாதிபதி டிரம்ப்  50% வரி விதித்துள்ளார். இந்த வரி விதிப்பு காரணமாக இந்திய உணவு பொருள் உற்பத்தியாளர்கள், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் தேயிலை தேக்கமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து 1.7 கோடி கிலோ அளவில் அமெரிக்காவுக்கு தேயிலை ஏற்றுமதியானது. இந்நிலையில் இந்தியா மீதான பொருளாதார பாரபட்சம் காரணமாக இந்திய தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தொடங்கி மே மாதம் வரை 60 லட்சம் கிலோ அளவில் மட்டுமே தேயிலை ஏற்றுமதியாகியுள்ளது. வரிவிதிப்பு காரணமாக வரும் காலத்தில் தேயிலை ஏற்றுமதி ஆர்டர்கள் மேலும் குறையும் என்று அஞ்சப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments