Wednesday, February 4, 2026
Homeசெய்திகள்எட்டு பேரை மணந்து மோசடி.. ஒன்பதாவது திருமண முயற்சியில் சிக்கிய ஆசிரியை!

எட்டு பேரை மணந்து மோசடி.. ஒன்பதாவது திருமண முயற்சியில் சிக்கிய ஆசிரியை!

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு எட்டு பேரை திருமணம் செய்து மோசடி செய்த ஆசிரியையை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலம் நாக்பூரில் பல ஆண்களை திருமணம் செய்து அவர்களை ஏமாற்றி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

சமீரா பாத்திமா நாக்பூரில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. நன்றாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில், அழகை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது திருமணத்திற்கு தயாரான இவர், மறுமணம் செய்வதற்கான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

 அதை பார்த்த பலரும் அவரது சமூக வலைதளம் மூலமாக தொடர்பு கொண்டனர். முதல் திருமணத்தில் பல விதமான கொடுமைகளை அனுபவித்ததாகவும், அதனால் அவரை பிரிந்து விட்டதாகவும் பேசுபவர்களிடம் அனுதாபத்தை சம்பாதித்து அனைவரையும் நம்ப வைத்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். பின்னர் சில நாட்களில் இவரது சுயரூபம் வெளியே தெரிய ஆரம்பித்தது. 

குறிப்பாக அவர் முஸ்லிம் சமூகத்தில் உள்ள பணக்கார மற்றும் திருமணமாகாத வாலிபர்களை குறிவைத்து இவர் மோசடியை செய்துள்ளார் என்ற விவரம் தெரியவந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் 8 ஆண்களை இதுபோன்ற திருமணம் செய்து ஏமாற்றிய இவர், ஒருவரிடம் இருந்து  50 லட்சமும், மற்றவரிடம் இருந்து 15 லட்சம் பறித்து உள்ளார்.

 இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரை விசாரிக்க தொடங்கிய போலீஸ் அதிகாரி சமீராவை வலை வீசி தேடி வந்தனர். போலீசார் இவரை தேடி வந்த செய்தி தெரிந்து இவர் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். அப்போதும் அவர் தனது கல்யாண ஆட்டத்தை நிறுத்தவில்லை. ஒன்பதாவது முறையாக ஒரு பணக்காரரை வீழ்த்த திட்டமிட்டார்.

 அப்போது ஒன்பதாவது நபரை நாக்பூரில் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு வரவழைத்தார். இதனை எப்படியோ அறிந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் கடைக்குச் சென்று இவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments