தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் கடந்த 30ஆம் தேதி மருந்து தொழிற்சாலையில் ரசாயன கலவை எந்திரம் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு 40 பேர் இறந்ததாகவும் மேலும் 33 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. இதனை அடுத்து இறந்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. காயமடைந்த ஒரு நபர் நேற்று பலியானதால் இந்த விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் 8 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாயமான 8 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் இது குறித்து அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்பி மாயமானவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டு உள்ளது.


