Sunday, March 22, 2026
Homeசெய்திகள்ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை - தேர்தல் ஆணையம் மறுப்பு!

ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை – தேர்தல் ஆணையம் மறுப்பு!

வாக்குத் திருட்டு தொடர்பாக “ஹைட்ரஜன் பாம்” வீசப்போவதாக ராகுல் காந்தி அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை வெளியிட்டார்.
ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை – வாக்கு திருட்டு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு.

வாக்குத் திருட்டு தொடர்பாக “ஹைட்ரஜன் பாம்” வீசப்போவதாக ராகுல் காந்தி அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை வெளியிட்டார்.

ராகுல் காந்தியின் முக்கிய குற்றச்சாட்டுகள்:

லட்சக்கணக்கான வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கம்: எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கும் வாய்ப்புள்ள தலித்துகள், ஆதிவாசிகள், மற்றும் சிறுபான்மையினர் வாக்காளர் பட்டியலில் இருந்து திட்டமிட்டு நீக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இது இந்திய ஜனநாயகத்தையே குலைக்கும் முயற்சி என்றார்.

ஆலந்த் தொகுதி விவகாரம்: கர்நாடக மாநிலம் ஆலந்த் சட்டமன்றத் தொகுதியில் 6,018 வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்க முயற்சி நடந்ததாக அவர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்குத் தெரியாமலேயே சிலர் விண்ணப்பம் (Form 7) அளித்து வாக்காளர்களை நீக்க முயன்றுள்ளனர்.

மாநிலங்களுக்கு இடையேயான முயற்சி: கர்நாடகாவில் உள்ள வாக்குகளை நீக்க, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். இது ஒரு ஒருங்கிணைந்த மற்றும் பரவலான முயற்சி என்பதைக் காட்டுவதாகவும் கூறினார்.

போலி மொபைல் எண்கள்: வாக்குகளை நீக்கப் பயன்படுத்தப்பட்ட போலி மொபைல் எண்கள் மற்றும் போலி ‘லாக்-இன்’கள் குறித்தும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். கோதாபாய் என்ற ஒரு பெண்மணியின் பெயரில் போலி ‘லாக்-இன்’ உருவாக்கப்பட்டு 12 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்தப் பெண்ணுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்றும் அவர் தெரிவித்தார். சூர்யகாந்த் என்பவரின் பெயரில் 14 நிமிடத்தில் 12 வாக்காளர்களை நீக்க விண்ணப்பிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, வாக்காளர் பெயர் நீக்கப்பட்டவர்கள் சிலரை மேடைக்கு அழைத்து வந்து பேச வைத்தார். இதன் மூலம், தனது குற்றச்சாட்டுகள் முழுமையாக ஆதாரங்களின் அடிப்படையில் கூறப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments