Wednesday, February 4, 2026
Homeவணிகம்பங்குச்சந்தை இரண்டாவது நாளாக உயர்வு!

பங்குச்சந்தை இரண்டாவது நாளாக உயர்வு!

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு, அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிந்து வந்தது. ஒரு கட்டத்தில் கடந்த வாரத்தில் 80 ஆயிரம் புள்ளிகள் வரை சரிந்தது. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க வர்த்தக குழுவினர் இந்தியா வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அமெரிக்க வரிகள் குறைக்கப்படுவதற்கான சாதகமான சூழல் நிலவியதாக தெரிவிக்கப்பட்டது. இது இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொளித்து எழுச்சி பெற்றது. 

நேற்று இந்த நிலை நீடித்து இரண்டாவது நாளாக பங்குச்சந்தைகள் உயர்ந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் “சென்செக்ஸ்” 312 புள்ளிகள் அதாவது 0.38% உயர்ந்து 82 ஆயிரத்து 693 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் “நிப்டி” 
91 புள்ளிகள் அதாவது 0.36% உயர்ந்து 25 ஆயிரத்து 330 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments