திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவிலில் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையார் கோவிலை ஒட்டி இருக்கும் அண்ணாமலையார் மலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
இந்நிலையில் வைகாசி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் சொல்ல உகந்த நேரம் குறித்த தகவலை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
பௌர்ணமி வருகிற பத்தாம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 12:32 மணிக்கு தொடங்கி மறுநாள் 11ஆம் தேதி புதன்கிழமை மதியம் 1:58 மணிக்கு நிறைவடைகிறது.
இன்று வைகாசி விசாகம் என்பதால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஜூன் 10 காலை 11.35 மணிக்கு கிரிவலம் தொடங்கி ஜூன் 11 மதியம் 1.30 முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது.

