Home Uncategorized ‘துணிவு’ பட டிரைலர் வெளியீடு -ரசிகர்கள் உற்சாகம்

‘துணிவு’ பட டிரைலர் வெளியீடு -ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தின் பாடல்களான  ‘சில்லா சில்லா’, காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘துணிவு’ திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Exit mobile version