Thursday, March 12, 2026
HomeUncategorizedதிருப்பதியில் ஜூலை, ஆகஸ்ட் தரிசன டிக்கெட் 24-ல் வெளியீடு

திருப்பதியில் ஜூலை, ஆகஸ்ட் தரிசன டிக்கெட் 24-ல் வெளியீடு

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கா, வரும் 24-ம் தேதி ஆன்லைனில் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் வெளியிடப்பட உள்ளன.

திருமலை திருப்பதியில் தற்போது கோடைவிடுமுறையையொட்டி பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் தர்ம தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். 

இந்நிலையில், வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 300 சிறப்பு தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசிக்க வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது.

ஆகையால், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.ap.gov.in என்கிற இணையதளம் மூலம் மட்டுமே பக்தர்கள் தங்களது டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், போலி இணையங்களை நம்பிஏமாற வேண்டாம் எனவும் திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments