அமைச்சரவையை மேலும் வலுப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 2021-ம் ஆண்டு மே 7-ம் தேதி 33 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதன் பின்னர் கடந்த மார்ச் 29-ம் தேதி அமைச்சரவையில் இலாக்க மாற்றம் செய்யப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கருக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது.
இதனை வகித்து ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.இதன் பின்னர் தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் அமைச்சரவையை மேலும் வலுப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் இந்த முறை அமைச்சரவையில் இலாக்கா மாற்றத்தோடு, புதிய எம்.எல்.ஏக்கள் அமைச்சராக வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைக்கிறது.
மேலும், திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த முறை அமைச்சரவையில இடம் கொடுக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகின்றது.
