Wednesday, February 4, 2026
Homeசெய்திகள்மின்சாரக் கட்டணம் 1 கோடி? ஷாக்கான மாரியப்பன்!

மின்சாரக் கட்டணம் 1 கோடி? ஷாக்கான மாரியப்பன்!

திருநெல்வேலி மாவட்டம், மருதகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் வீட்டில், 1.61 கோடி ரூபாய்க்கு மின்சாரக் கட்டணம் வந்ததால், அவரும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, மாரியப்பன் கூறியதாவது: “வழக்கமாக, எங்க வீட்டுக்கு 400 முதல் 500 ரூபாய் வரைதான் மின்கட்டணம் வரும். ஆனால், இந்த மாதம் 1.61 கோடி ரூபாய் என மின்வாரிய ஊழியர் ரசீது கொடுத்தபோது, நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். இது ஏதோ தவறுதலாக நடந்திருக்கலாம் என நினைத்து, மீண்டும் சரிபார்க்கச் சொன்னேன். ஆனால், அவரும் அதே தொகையைச் சரிபார்த்து, கட்டாயம் கட்ட வேண்டும் என்று கூறினார். உடனே, மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். அதற்கு, அவர்கள் மின்மீட்டரில் ஏதேனும் கோளாறு இருக்கலாம், அல்லது கணினியில் பதிவேற்றியதில் தவறு நடந்திருக்கலாம் எனச் சமாதானம் கூறினர்.”

இதை விசாரித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். மின்கட்டணத்தின் இத்தகைய பெரும் தொகை, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments