அதிகபட்சமாக வேலூரில் 41.5°C வெப்பநிலை பதிவாகியுள்ளது

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 41.5°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 40.7°C வெப்பநிலை பதிவு
கோடை வாசஸ்தலமான ஊட்டி, கொடைக்கானலில் வழக்கத்தை விட அதிகளவில் வெயில் பதிவாகியுள்ளது.
ஊட்டியில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். கொடைக்கானலில் வழக்கத்தை விட 6 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் சுற்றுலா பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.