நாய் என்று திட்டியதால் மனம் உடைந்த பெண் ஊழியர் தற்கொலை செய்துள்ளார். இதற்காக அவருடைய குடும்பத்திற்கு ரூ.90 கோடி இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவை தளமாகக் கொண்டு செயல்படும் டி- யுபி (D-up) என்ற அழகு சாதன பொருட்கள் உற்பத்தி நிலையத்தில் சடோமி(Satomi) வயது 25. என்ற இளம் பெண் கடந்த 2021 ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். முன் அனுமதியின்றி வாடிக்கையாளரை அவர் சந்தித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அவரை நிறுவனத்தின் தலைவர் மிட்சுரு சகாய் விசாரணைக்கு அழைத்தார். அப்போது அவரை “நாய்” என்ற பொருளில் திட்டியதாக கூறப்படுகின்றது. இதனால் மனமுடைந்த சடோமி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் விடுப்பில் சென்றார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருடைய பெற்றோர் சடோமியை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
நீண்ட காலம் கோமா நிலையில் இருந்த அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக அவருடைய பெற்றோர் தங்கள் மகளை இந்த நிலைக்கு காரணம் அவர் வேலை பார்த்த நிறுவனமும் அதன் தலைவர் மிட்சுரு சகாய் தான் என்று கூறியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த டோக்கியோ மாவட்ட கோர்ட் இந்த விவகாரத்தில் சடோமியின் குடும்பத்துக்கு ஜப்பான் நாட்டு பணமான 150 மில்லியன் யென் இந்திய மதிப்பில் ரூ.90 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அழகு சாதன உற்பத்தி நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. மேலும் அதன் தலைவரானமிட்சுரு சகாய் தனது பணியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனை அடுத்து அவருக்கான இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும் தனது பதவியையும் ராஜினாமா செய்தார் மிட்சுரு சகாய். மேலும் அந்த குடும்பத்தினரிடம் அந்த நிறுவனம் மன்னிப்பும் கேட்டது.

