Thursday, February 5, 2026
HomeUncategorizedweekend எங்க ட்ரிப் போகலானு யோசிக்கிறீர்களா? அப்போ சூப்பர் சாய்ஸ் இது தான்!

weekend எங்க ட்ரிப் போகலானு யோசிக்கிறீர்களா? அப்போ சூப்பர் சாய்ஸ் இது தான்!

தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிழக்கு தொடர்ச்சி  மலை பகுதியில் அமைந்துள்ளது கொல்லிமலை. நாமக்கல்லில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரம் கொல்லிமலை அமைவிடம். இங்கு பலவிதமான இயற்கை நீர்வீழ்ச்சிகளும், எண்ணற்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளும் இருக்கும் இடமாகும்.

 காற்று மாசு இல்லாமல் தூய்மையான காற்றை சுவாசிக்க மக்கள் கொல்லிமலையை நாடிச் சென்று அங்கிருக்கும் இயற்கை அழகை கண்டு ரசித்து உடலுக்கு புத்துணர்ச்சியை பெறலாம். இப்பதிவில் நாம் கொல்லிமலைக்கு  போவது அங்கு எந்தெந்த இடங்களை பார்க்கலாம் என்று காண்போம்.

 கொல்லிமலை 

 கடல் மட்டத்தில் இருந்து 1200 மீட்டர் உயரத்தில் உள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து கொல்லிமலை செல்வதற்கு மிக அழகான 72  கொண்டை ஊசி வளைவுகளை உடைய சாலைகளை கடந்து செல்ல வேண்டும். சாலைகளின் இருப்பக்கமும் மிகவும் அழகான இயற்கை காட்சிகள் இருக்கும். ஒவ்வொரு கொண்டை ஊசியிலும் இருந்து பல வியூ பாயிண்ட்களை ரசித்தப்படியே செல்லலாம்.
 

1. ஆகாய கங்கை அருவி 

 இந்த அருவிக்கு செல்ல வேண்டும் என்றால் 1300 படிகளை இறங்கி பள்ளத்தாக்கில் நடக்க வேண்டும். மிகவும் அற்புதமான 300 அடி உயரத்தில் இருந்து அருவி ஊற்றும் அழகை கண்டு அழகில் மயங்கி விடுவார்கள். இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து தெறிக்கப்படும் சாரல்கள் நம் உடல் முழுவதையும் நினைத்து விடும். அருவியின் அழகை ரசித்து விட்டு திரும்பவும் அந்த 1300 பணிகள் வழியாகவே ஏறி மேலே வர வேண்டும் இதுதான் மிகவும் கடுமையாக இருக்கும்.

2. அரபாலீஸ்வரர் கோயில்
 
 ஆகாய கங்கை அடுத்து அருகில் உள்ள மிகப் பழமை வாய்ந்த சிவன் கோயிலாகும். பல சித்தர்களுக்கும் ஞானிகளுக்கும் அருள் புரிந்த அரபாலீஸ்வரர் கோயில்  அமைந்துள்ளது.

3. எட்டுகை அம்மன் கோவில் 

 இந்த அம்மனை கொல்லிப்பாவை என்று கூறுகிறார்கள் இந்த அம்மன் கொல்லிமலையை காப்பாற்றும் காவல் தெய்வமாக இங்கு வாழும் ஊர் மக்கள் வணங்கி வழிபடுகின்றார்கள்.

4. சீக்குப்பாறை அருவி

கொல்லிமலையிலிருந்து 15 கிலோமீட்டர் தூரம் பயணித்து சென்றால், சீக்குப்பாறை அருவியை அடையலாம், இது கொல்லிமலையின் உயர்ந்த சிகரமாகும். இங்கு ஒரு வாச் டவர் உள்ளது, அதிலிருந்து நாமக்கல் நகரத்தை அழகாக காணலாம்.

5. மாசில்லா நீர்வீழ்ச்சி

மாசில்லா நீர்வீழ்ச்சிக்கு செல்வது எளிது, கடினமான பாறைப் பாதைகள் இல்லை. எண்ணெய் தேய்த்து குளிக்கும் இடமாகவும், இயற்கை அழகு சூழ்ந்த ஒரு ரம்யமான நீர்வீழ்ச்சியாகவும் உள்ளது. இங்கு மாற்று உடை அறை மற்றும் சிறுவர் பூங்கா வசதிகள் உள்ளன.

6. தாவரவியல் பூங்கா

கொல்லிமலையில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா, அரிய வகையான மூலிகைகளையும் பூச்செடிகளையும் பராமரிக்கிறது.

7. படகு வீடு

ஏரியில் அமைந்துள்ள படகு வீடு அற்புதமானது. படகுகளில் பயணித்து இயற்கை அழகை ரசிக்கும் வாய்ப்பு உள்ளது..

கொல்லிமலையில் பல்வேறு தங்கும் வசதிகளும், அறைகளும் உள்ளன. அங்கு விரும்பிய உணவுகளை சமைத்து வழங்குகின்றனர். நீங்கள் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ வந்து கொல்லிமலையின் அழகை கண்டு ரசிக்கலாம். ஒரு நபருக்கு செலவு சுமார் 3000 முதல் 4000 ரூபாய் வரை ஆகும். இந்த கோடைக்காலத்தில் நாம் ஒரு பட்ஜெட் பிரிவில் கொல்லிமலையை அனுபவிக்க முடியும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments