Thursday, February 5, 2026
HomeUncategorizedகோயம்புத்தூர்-ல இவ்ளோ விஷயம் இருக்கு! இந்த வாரம் ஒரு ட்ரிப் போயிட்டு வாங்க!

கோயம்புத்தூர்-ல இவ்ளோ விஷயம் இருக்கு! இந்த வாரம் ஒரு ட்ரிப் போயிட்டு வாங்க!

கோயம்புத்தூரின் சுற்றுப்புறங்களில் நீலகிரி, ஊட்டி, குன்னூர் போன்ற பல சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த வார இறுதி விடுமுறையை குழந்தைகளுடன் கொண்டாட, கோவையை சுற்றி உள்ள சுற்றுலா தலங்களை இப்போது பார்க்கலாம்.

கோவை கொண்டாட்டம் தீம் பார்க்: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த தீம் பார்க் பேரூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
வைதேகி வாட்டர் பால்ஸ்: கோயம்புத்தூரிலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல சிறப்பு அனுமதி தேவை என்று கூறப்படுகிறது.

கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி: குற்றாலம் போல அமைந்துள்ள இந்த சிறுவாணி நீர்வீழ்ச்சி வெள்ளையங்கிரி மலைப் பகுதியிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

மங்கி பால்ஸ்: கோயம்புத்தூரிலிருந்து 60 கி.மீ தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இந்த குரங்கு நீர்வீழ்ச்சி ஆழியார் அணைக்கு அருகில் அமைந்துள்ளது.

ஈஷா யோகா மையம்: கோவைக்கு மேற்கே 30 கிமீ தொலைவில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம், 112 அடி (34 மீ) உயரமுள்ள சிவன் உருவ சிலையால் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல சுற்றுலாப் பயணிகள் வந்து ரசிக்கின்றனர்.

பிளாக் தண்டர்: கோயம்புத்தூரிலிருந்து அவினாசி சாலையில் 40 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த தீம் பார்க், 49 விளையாட்டுக்களுடன் சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. குழந்தைகளுடன் நேரத்தை செலவிட இது ஒரு சிறந்த இடமாகும்.

ஆழியார் அணை: பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள இந்த நீர்த்தேக்கம் கோவையிலிருந்து 6.5 கி.மீ. தொலைவில் உள்ளது. பொழுதுபோக்கு பூங்காக்கள், மீன் காட்சியகங்கள், தீம் பார்க்குகள் இங்கு அமைந்துள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments