இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, மொபைல் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளின் தரத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், தற்போதுள்ள Quality of Service (QoS) விதிகளில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து இன்று, செப்டம்பர் 30, 2026, Open House Discussion நடத்துகிறது. இந்தக் கூட்டம் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
TRAI கடந்த 5 ஆகஸ்ட் 2026 அன்று The Standards of Quality of Service of Access (Wireline and Wireless) and Broadband (Wireline and Wireless) Service Regulations, 2024 விதிகளில் திருத்தங்களை முன்மொழிந்து consultation paper வெளியிட்டது. அதன் மீதான கருத்துகள் மற்றும் counter-comments பெறப்பட்ட நிலையில், தற்போது இந்த Open House Discussion நடைபெறுகிறது.
நெட்வொர்க் கோளாறுகளுக்கு முக்கிய கட்டுப்பாடு
வரைவு திருத்தங்களில் குறிப்பிடத்தக்க அம்சமாக Significant Network Outage தொடர்பான விதிகள் உள்ளன.
ஒரு மாவட்டத்தில் வயர்லெஸ் சேவை தொடர்ந்து 4 மணி நேரத்துக்கும் மேலாக செயல்படாமல் இருந்தாலோ, அல்லது Licensed Service Area-வில் 10%க்கும் அதிகமான சந்தாதாரர்கள் தொடர்ந்து 4 மணி நேரத்துக்கும் மேலாக முழுமையான சேவை இழப்பை சந்தித்தாலோ, அது Significant Network Outage எனக் கருதப்படும்.
மேலும், இப்படியான முக்கியமான network outage 24 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் முறையும் வரைவு விதிகளில் முன்மொழியப்பட்டுள்ளது.
- Postpaid வாடிக்கையாளர்களுக்கு — பாதிக்கப்பட்ட நாட்களுக்கான proportional rent rebate அடுத்த billing cycle-ல் வழங்கப்பட வேண்டும்.
- Prepaid வாடிக்கையாளர்களுக்கு — பாதிக்கப்பட்ட நாட்களுக்கு சமமான காலத்திற்கு tariff plan validity நீட்டிக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் நீண்ட நேரம் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டால், வாடிக்கையாளர்களுக்கு நேரடி நிவாரணம் கிடைக்கும் வகையில் விதிகளை அமைக்க TRAI முன்மொழிந்துள்ளது.
Coverage Map துல்லியத்துக்கும் புதிய benchmark
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களில் வெளியிடும் service-wise geospatial coverage mapsஎவ்வளவு துல்லியமாக உள்ளன என்பதற்கும் புதிய benchmark முன்மொழியப்பட்டுள்ளது.
வரைவு விதிகளின்படி, coverage map-ன் accuracy குறைந்தது 98% இருக்க வேண்டும் என benchmark நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மாதந்தோறும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் முக்கிய நோக்கம், ஒரு பகுதியில் உண்மையில் கிடைக்கும் network coverage-க்கும், நிறுவனங்கள் தங்கள் website-ல் காட்டும் coverage-க்கும் இடையே அதிக வேறுபாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதாகும்.
4G, 5G வேகம் குறித்து புதிய கண்காணிப்பு
4G மற்றும் 5G சேவைகளில் நிறுவனங்கள் குறிப்பிடும் typical download மற்றும் upload speed-க்கும், வாடிக்கையாளர்கள் உண்மையில் பெறும் வேகத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் TRAI கண்காணிக்க முன்மொழிந்துள்ளது.
மேலும், 5G network-ல் அதிகமான traffic காரணமாக network capacity பாதிக்கப்படுகிறதா என்பதை அறிய Physical Resource Block (PRB) utilisation போன்ற தொழில்நுட்ப அளவீடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
5G Network Slicing-க்கும் விதிகள்
புதிய தலைமுறை 5G தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் Network Slicing தொடர்பாகவும் புதிய QoS அளவுகோல்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
5G network-ல் ஒரு cell-ன் PRB utilisation 80%-ஐ விட அதிகமாக இருக்கும் cells எண்ணிக்கை 1%-க்கு மிகாமல்இருக்க வேண்டும் என வரைவு benchmark குறிப்பிடுகிறது.
மேலும், புதிய network slice ஒன்றை உருவாக்கத் திட்டமிடும் telecom service provider, அதற்கான network slice parameters மற்றும் போதுமான network capacity இருப்பதை TRAI-க்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.
Call Quality-க்கும் புதிய அளவுகோல்
மொபைல் அழைப்புகளில் Silence Call Rate என்ற புதிய QoS parameter-ஐ சேர்க்க TRAI முன்மொழிந்துள்ளது.
இதற்கான benchmark 1%-க்கு மிகாமல் இருக்க வேண்டும் என வரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Broadband சேவைகளில் Fault Repair நேரம்
வயர்லைன் broadband சேவைகளில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்வதற்கான நேரத்தையும் TRAI கண்காணிக்க முன்மொழிந்துள்ளது.
Mean Time-To-Repair (MTTR) என்ற அளவுகோலுக்கு 10 மணி நேரம் என்ற benchmark குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், broadband சேவை தொடர்பான significant outage 24 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மேலே குறிப்பிடப்பட்ட rebate/validity extension வழங்கும் விதியும் முன்மொழியப்பட்டுள்ளது.
புகார் பதிவு செய்வதிலும் மாற்றம்
Network-wide அல்லது localized service disruption ஏற்பட்டாலும், வாடிக்கையாளர்கள் புகார்களைப் பதிவு செய்யும் வசதி தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று TRAI வரைவு முன்மொழிகிறது.
அத்தகைய கோளாறு நேரத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் புகார் பதிவு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டால், அவர்களை system-generated fault tickets உடன் தானாக இணைக்கும் நடைமுறையும் முன்மொழியப்பட்டுள்ளது. இத்தகவல்கள் QoS reporting metrics-ல் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Service Quality-யுடன் Consumer Experience-க்கும் முக்கியத்துவம்
புதிய வரைவு வெறும் network performance அளவீடுகளில் மட்டும் கவனம் செலுத்தவில்லை.
Quality of Experience Score (QoES) என்ற அளவீட்டை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது. Network performance, consumer service மற்றும் consumer perception உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களிலிருந்து பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு service providers-ன் QoES மதிப்பிடப்படலாம்.
இதனால், ஒரு நிறுவனத்தின் சேவை தொழில்நுட்ப ரீதியாக எப்படி செயல்படுகிறது என்பதுடன், வாடிக்கையாளர்கள் அந்த சேவையை எவ்வாறு அனுபவிக்கிறார்கள் என்பதையும் கண்காணிக்கும் அணுகுமுறை உருவாகலாம்.
விதிமீறல்களுக்கு Financial Disincentive
வரைவு திருத்தங்களில் QoS விதிகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு financial disincentive தொடர்பான விதிகளும் இடம்பெற்றுள்ளன.
தவறான compliance report வழங்கப்பட்டால், முதல் முறையில் ஒரு benchmark-க்கு ₹2 லட்சம் வரை, தொடர்ச்சியான தவறான reporting-க்கு ₹5 லட்சம் வரை, அதன் பின்னர் ஒவ்வொரு தொடர்ச்சியான தவறுக்கும் ₹10 லட்சம் வரைfinancial disincentive விதிக்கக்கூடிய முன்மொழிவு உள்ளது.
மற்ற சில விதிமீறல்களுக்கு ஒரு instance-க்கு ₹5 லட்சம் வரை, தொடர்ந்து மீண்டும் விதிமீறல் ஏற்பட்டால் ₹8 லட்சம் மற்றும் பின்னர் ₹10 லட்சம் வரை financial disincentive விதிக்கும் முன்மொழிவும் உள்ளது.
எப்போது அமலுக்கு வரும்?
இவை தற்போது முன்மொழியப்பட்ட திருத்தங்கள். TRAI consultation paper-ல் முன்மொழியப்பட்ட First Amendment Regulations 2026, இறுதி வடிவில் அறிவிக்கப்பட்டால் 1 அக்டோபர் 2026 முதல் அமலுக்கு வரும் என draft notification குறிப்பிடுகிறது. எனவே, இன்று நடைபெறும் Open House Discussion மற்றும் அடுத்தடுத்த regulatory process முடிவுகள் முக்கியமானவை.
TRAI-யின் consultation page-ல் இந்த consultation-ன் கருத்து சமர்ப்பிக்கும் காலக்கெடு முடிவடைந்ததாகவும், stakeholder submissions வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. BSNL, Airtel, Vodafone Idea, Jio உள்ளிட்ட service providers மற்றும் பல்வேறு consumer/industry organisations கருத்துகளை சமர்ப்பித்துள்ளன.
