திருச்சி, காவேரி பாலம் நாளை நள்ளிரவு முதல் மூடப்படுகிறது. பராமரிப்பு பணிக்காக முழுவதும் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவிப்பு
திருச்சி – ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1976-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டு தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பாலத்தில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், பாலத்தை தாங்கும் தூண்களில் ஏற்பட்ட இடைவெளி மற்றும் விரிசல் காரணமாக வாகன போக்குவரத்துக்கு அவ்வப்போது இடையூறு ஏற்பட்டது. ஆகவே, இந்த பாலம் சீரமைப்பு பணிக்காக சிந்தாமணியில் இருந்து செல்லும் வாகனங்கள் ஓடத்துறை, ஓயாமரி வழியாக சென்னை பைபாஸ் சாலை, திருவானைக்காவல் வழியாக சென்று மீண்டும் அதே வழியில் திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் போக்குவரத்து மாற்றம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக பாலத்தின் பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்ததுடன் அருகிலியே புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கபடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

