Monday, March 30, 2026
Homeசெய்திகள்பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு பிரசாரத்தைத் தொடங்கிய த.வெ.க தலைவர் விஜய்!

பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு பிரசாரத்தைத் தொடங்கிய த.வெ.க தலைவர் விஜய்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காகப் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு, அங்கேயே தனது தேர்தல் பிரசாரத்தைத் த.வெ.க தலைவர் விஜய் அதிரடியாகத் தொடங்கியுள்ளார்.

பிரசாரத்தில் பேசிய அவர், தனது தாய் வீட்டில் இருந்து பரப்புரையைத் தொடங்குவதாகவும், தமிழகத்தின் தற்போதைய அவலநிலைக்கு ‘தீயசக்தி’யான திமுக தான் காரணம் என்றும் கடுமையாகச் சாடினார்.

டாஸ்மாக்கில் மட்டும் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ள தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும், இது நாடா அல்லது காடா என்ற சந்தேகம் எழுவதாகவும் கேள்வி எழுப்பினார்.

ஸ்டாலின் அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை, ஐந்து ஆண்டுகளாகக் குடும்பத்துடன் கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருந்தனர் என்று சாடிய விஜய், அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களித்து இந்த அரசுக்கு வேட்டு வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தனது வசதியான வாழ்க்கையை உதறிவிட்டு உங்களுக்காகவே வந்திருக்கிறேன் என்று உருக்கமாகப் பேசிய அவர், ஏப்ரல் 23-ஆம் தேதி ‘ஜென் ஜி’ (Gen Z) இளைஞர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்துத் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments