Home உலகம் ஈரானுடன் ஒப்பந்தம் நிறைவு: ஹார்முஸ் வழியைத் திறக்க டிரம்ப் அதிரடி உத்தரவு!

ஈரானுடன் ஒப்பந்தம் நிறைவு: ஹார்முஸ் வழியைத் திறக்க டிரம்ப் அதிரடி உத்தரவு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில், “இஸ்லாமியக் குடியரசான ஈரானுடனான ஒப்பந்தம் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது; இதற்காக அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!

ஹார்முஸ் நீர்ச்சந்தியை (Strait of Hormuz) எவ்விதக் கட்டணமுமின்றித் திறப்பதற்கான முழு அதிகாரத்தை நான் இதன் மூலம் வழங்குகிறேன்; அதோடு, அமெரிக்கக் கடற்படை விதித்திருந்த கடல்வழி முற்றுகையையும் உடனடியாகத் திரும்பப் பெற உத்திரவிடுகிறேன். உலக நாடுகளின் கப்பல்களே, உங்களது என்ஜின்களை இயக்குங்கள்… கச்சா எண்ணெய் தடையின்றிப் பாய்ந்து ஓடட்டும்!” என்று அதிரடியாகப் பதிவிட்டுள்ளார்.

உலக அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியப் பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் நீர்ச்சந்தியின் மீதான பதற்றத்தைத் தணித்து, சர்வதேசப் பொருளாதாரத்திலும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்திலும் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Exit mobile version