Home லைஃப்ஸ்டைல் படிப்பது எல்லாம் மறந்து போகுதா? குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க இதெல்லாம் கொடுங்க!

படிப்பது எல்லாம் மறந்து போகுதா? குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க இதெல்லாம் கொடுங்க!

குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிரச்சனையாக இருக்கக்கூடியது மறதி. (நினைவாற்றல்).

எவ்வளவு படித்தாலும் பரிட்சை எழுதும் பொழுது மறந்து போகிறதா? எந்த பொருளை எங்கே வைத்தோம் என்று தினமும் தேடுகிறீர்களா? உங்களது நினைவாற்றலை அதிகப்படுத்த இந்த உணவை எல்லாம் எடுத்துக் கொண்டால் நல்லது.

நினைவாற்றலை (Memory Power) அதிகரிக்கும் உணவுகள்

🌰 பருப்புகள் & விதைகள்

*பாதாம் – நினைவாற்றல், கவனம் அதிகரிக்கும்

*வால்நட் – மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தது

*பூசணி விதை – சிந்தனைத் திறன் மேம்படும்

*ஆளி விதை / சியா விதை – ஓமேகா-3 கொழுப்புகள்

🍎 பழங்கள்

*நாவல் பழம் / ப்ளூபெரி – நினைவுத் திறன் அதிகரிக்கும்

*மாதுளை – மூளைக்கு ரத்த ஓட்டம் மேம்படும்

*ஆரஞ்சு – வைட்டமின் C

*வெண்ணெய் பழம் (அவகாடோ) – நல்ல கொழுப்புகள்

🥬 காய்கறிகள்

*பசலை, முருங்கைக் கீரை, அரைக்கீரை

*ப்ரோக்கோலி – மூளை ஆரோக்கியம்

*பீட்ரூட் – மூளைக்கு ஆக்ஸிஜன் வழங்கும்

🥚 புரத உணவுகள்

*முட்டை – கற்றல், நினைவு திறன் மேம்படும்

*பால், தயிர், பனீர் – வைட்டமின் B12

*மீன் (சார்டின், மாக்கரல்) – DHA

🌾 தானியங்கள் & பயறுகள்

*முழுத் தானியங்கள் (சிறுதானியங்கள், ஓட்ஸ்)

*பாசிப்பயறு

*கொண்டைக்கடலை, துவரம்பருப்பு

🍯 பிற உணவுகள்

*கருப்பு சாக்லேட் (dark choccolate)– கவனம் அதிகரிக்கும்

*மஞ்சள் – மூளைச் செல்களுக்கு நன்மை

*நெய் (அளவோடு) – பாரம்பரிய மூளை ஊட்டம்

*தேன் – மூளைக்கு சக்தி

பானங்கள்

*கிரீன் டீ

*துளசி / பிராமி கஷாயம்

*மஞ்சள் பால் / குங்குமப்பூ பால்

🌿 பாரம்பரிய மூளை வலுப்படுத்தும் உணவுகள்

*வல்லாரை

*அஸ்வகந்தா

*பேரிச்சம் பழம், அத்திப்பழம்

🧠 நினைவாற்றல் மேம்பட சில குறிப்புகள்

உணவை தவிர்க்காமல் சரியான நேரத்தில் சாப்பிடவும்

தினமும் போதுமான தூக்கம்

யோகா, உடற்பயிற்சி இவை அனைத்தும் மிக முக்கியமான ஒன்று.

Exit mobile version