ஜப்பானுக்கு வடக்கில் உள்ள ரஷ்ய பகுதிதான் கம்சட்கா தீபகற்பம். இது ரஷ்யாவின் கிழக்கு பகுதியாகும். இங்கு உள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி நகரத்திலிருந்து சுமார் 119 கிலோமீட்டர் தொலைவில் கடலில் ஜப்பான் நேரப்படி காலை 8.25 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 4.55 மணிக்கு) நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
ரஷ்யாவில் நிலநடுக்கம்.8 .7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து ரஷ்யா, ஜப்பானை சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. ஜப்பானில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க அதிகாரிகள் அலாஸ்கா மற்றும் ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பசிபிக் பெருங்கடலில் ஒரு மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பும் என்று ஜப்பானிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ரஷ்யாவில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சில வீடியோக்கள் வந்திருக்கின்றன. இருப்பினும் பாதிப்பு எந்த அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.