Home Uncategorized மாணவிகளுக்கு வைரகம்மலை பரிசாக வழங்கிய நடிகர் விஜய்! கல்வி விருது வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி!

மாணவிகளுக்கு வைரகம்மலை பரிசாக வழங்கிய நடிகர் விஜய்! கல்வி விருது வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி!

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.  தற்போது மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற மாணவிகளுக்கு நடிகர் விஜய் வைரக்கம்மல் வழங்கி வருகிறார்.

 இன்று நடைபெற்று வரும் கல்வி விருது விழாவில் மாநில அளவில் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிகளான ஓவியாஞ்சலி மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சோஃபியாவிற்கும் பாராட்டு சான்றிதழ், கல்வி உதவித்தொகை மற்றும் வைரக்கம்மல் பரிசாக வழங்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Exit mobile version