நடிகர் விஜய் புதிதாக தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான இணைய முகவரியை அக்கட்சித் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து தனது இணையதளத்தில் விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில், “இது தமிழக வெற்றிக் கழகத்தில் என்னுடைய உறுப்பினர் அட்டை, நான் எடுத்து விட்டேன்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அடிப்படை சமத்துவக் கொள்கையை கடைப்பிடித்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், எங்களுடைய பயணத்தில் இணைந்து, மக்கள் பணி செய்ய நாங்கள் ஏற்கனவே வெளியிட்ட தவெக கட்சியின் உறுதிமொழியைப் பொதுமக்கள் படிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் கட்சியில் உறுப்பினராக இணையுங்கள்” என பதிவீட்டுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் வெற்றிக்கான நமது பயணத்தில், தோழர்களாக இணைந்து மக்கள் பணி செய்ய விரும்பினால் நமது கட்சியின் உறுதிமொழியைப் படித்துவிட்டு, கீழே உள்ள உறுப்பினர் சேர்க்கை QR-Code இணைப்புகளைப் பயன்படுத்தி, மிகவும் எளிய முறையில் உறுப்பினர் அட்டையை உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இதுகுறித்து தவெக கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகளிர் அனைவருக்கும் எனது அன்பான மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை நான் பெற்றுக் கொண்டது குறித்துப் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற அடிப்படைச் சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து, மக்கள் பணி செய்ய விரும்பினால், நமது கட்சியின் உறுதிமொழியைப் படித்துவிட்டு, கீழே உள்ள உறுப்பினர் சேர்க்கை QR-Code இணைப்புகளைப் பயன்படுத்தி, மிகவும் சுலபமான முறையில் உறுப்பினர் அட்டையை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம். வாருங்கள்! தோழர்களாக இணைந்து, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சரித்திரம் படைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
செயலியின் Demo Video காண்பித்து, உறுப்பினர் சேர்க்கை குறித்து கட்சித் தொண்டர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
