Home Uncategorized உண்மையான இந்துக்கள் வெறுப்புணர்வை தூண்ட மாட்டார்கள்: ராகுல் காந்தி

உண்மையான இந்துக்கள் வெறுப்புணர்வை தூண்ட மாட்டார்கள்: ராகுல் காந்தி

இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது – பிரதமர் மோடி பதிலடி

சிவபெருமானின் படத்தை காட்டி தன்னுடைய உரையை தொடங்குவதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி

அவையில் சிவபெருமானின் படத்தை காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதா? – ராகுல்

சிவபெருமானின் படம் அல்ல எந்த ஒரு படத்தையும் காட்ட கூடாது என்பதுதான் அவை விதி –
சபாநாயகர்

நான் காட்டிய சித்திரத்தில் நாங்கள் பாதுகாத்த சில சிந்தனைகள் உள்ளன – ராகுல்

இந்துக்கள் என தன்னை கூறிக் கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு குறித்து மட்டுமே பேசுகின்றனர்.

இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களைப் பரப்பும் மதம் அல்ல. பாஜக 24 மணி நேரமும் வெறுப்பைத் தூண்டுவதாக மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

நான் எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். 

என்னைப் பொறுத்தவரை அதிகாரத்தை விட உண்மைதான் சக்தி வாய்ந்தது. 

எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை. ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை – மக்களவையில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சு

சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள் பாஜகவினர் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம். 

ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

Exit mobile version