Wednesday, March 4, 2026
HomeUncategorizedஊரடங்கில் தளர்வு - பேருந்து சேவைக்கு பரிந்துரைத்த மருத்துவக்குழு

ஊரடங்கில் தளர்வு – பேருந்து சேவைக்கு பரிந்துரைத்த மருத்துவக்குழு

தமிழகத்தில் கொரோனா தொற்று சற்று குறைந்துள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. 

இதில், ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனையில் மருத்துவ குழு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.  

மேலும், இந்த ஆலோசனையில் கொரோனா தொற்று அதிகமுள்ள 8 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என மருத்துவ குழுவினர் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் பெரிய வணிக நிறுவனங்கள், மால்களை திறக்கவும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments