Thursday, March 19, 2026
HomeUncategorizedஉருது - பாரசீக இலக்கிய உலகின் அற்புதக் கவிஞர் என்று போற்றப்படும் மிர்சா காலிப் (Mirza...

உருது – பாரசீக இலக்கிய உலகின் அற்புதக் கவிஞர் என்று போற்றப்படும் மிர்சா காலிப் (Mirza Ghalib) பிறந்த நாள் இன்று (டிசம்பர் 27, 1797)

பெற்றோர்கள் லாகூரை சேர்ந்தவர்கள் என்றாலும் காலிப் டெல்லியில் வாழ்ந்தவர். 11 வயதில் உருது மொழியில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். சொந்த வாழ்க்கையில் அடுக்கடுக்கான சோதனைகள், சோகங்களை அனுபவித்தார். இதனால் வாழ்க்கையில் எதார்த்தப் போக்கை கடைபிடித்தார். இவரது படைப்புகளிலும் இது பிரதிபலித்தது. 

அன்றைய காலகட்டத்தின் சமூக, அரசியல், பொருளாதார நிலை குறித்த வர்ணனைகளும் இடம்பெற்றன. மாபெரும் கவிஞர், உரைநடை எழுத்தாளர் எனப் பிரபலம் அடைந்தாலும் உருது கஜல்களுக்காகவே கொண்டாடப்படுகிறார். தத்துவம், பயணங்கள், வாழ்க்கையின் மர்மங்கள் மற்றும் பல விஷயங்கள் குறித்து எழுதினார். இதனால், உருது இலக்கியத்தில் கஜல்களின் களங்கள் விரிவடைந்தன.. உருது இலக்கியம் எளிமை வடிவம் பெறவும், பிரபலமாகவும் இவரது உரைநடை பாணி அடித்தளம் அமைத்தது. 

இவரது படைப்புகள் எளிமையாக, சரளமாக இருந்ததால், ‘தற்கால உருது உரைநடையின் தந்தை’ என்று குறிப்பிடப்பட்டார். 

இவரது நடை, வாசகரோடு பேசுவது போல இருக்கும்.. இவரது படைப்புகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உருது, பாரசீக காவிய உலகுக்கு உயர்ந்த அந்தஸ்தை பெற்றுத் தந்த மிர்சா காலிப் 72-வது வயதில் (1869) மறைந்தார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments