Skip to main content

உடல் ஆரோக்கியத்தை காக்கும் தனுராசனம்..!

தனுராசனம்..!

உடலின் தொப்புளுக்கு மேற்பட்ட பகுதி புஜங்காசனத்தில் இருக்க, கீழ்ப்பகுதி சலபாசனத் தோற்றத்தில் இருக்கும். அதனுடன் கைகள், கால்களைப் பிடித்திருக்க முழங்கால் மடங்கி வில்போன்று தோற்றமளிக்கும். முதுகெலும்பு பின்புறம் வளையும் புஜங்காசனம் ஒருவகை. தனுராசனத்தில் வேறு வகையாக அமையும்.

செய்முறை :

1. ஒரு விரிப்பை நீளவாட்டில் மடித்து அதன்மீது குப்புறப்படுக்கவும்.
2. கால்களை நீட்டிக் கொள்ளவும்.
3. இடக்கை விரலால் வலக்கால் கட்டை விரலைப் பிடித்துக் கொள்ளவும்.
4. மெதுவாக இடக்காலை பின்புறமாக மடக்கி வரவும்.
5. இந்த நிலையில் தொடை வயிறுக்குச் சமீபம் அமையும்.
6. இப்போது கைகள் இரண்டையும் முதுகுப்புறமாக நீட்டி மடங்கிய கால்களைப் பற்றிக் கொள்ளவும்.
7. இந்நிலையில் வயிற்றுப்பகுதி மட்டும் தரையில் படிந்திருக்க வேண்டும். தலை தூக்கிய நிலையில் இருக்க வேண்டும்.
இந்த ஆசனத்தை இரண்டு நிமிடம் செய்யலாம்.

பயன்கள் :

1. ஆஸ்துமா, மார்புச்சளி, ஈசினோபீலியா நோய்கள் குணமாகும்.
2. இது பெண்களுக்கு நல்ல பலன் தரும் ஆசனம். மாதவிடாய், கர்ப்பக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.
3. அட்ரீனல் நாளத்தை நன்கு இயக்கி உடல் முழுவதும் சுறுசுறுப்படையச் செய்யும்.
4. பெண்களுடைய ஓவரி ஆண்களுடைய டெஸ்டீஸ் மற்றும் சிறுநீரகங்களைச் சுறுசுறுப்படையச் செய்து அதனால் பலம் பெற்று இளமை உண்டாகும்.
5. நரம்புகளும் முதுகெலும்பும் வளையும். கூன் முதுகு, முதுகு வலி, இடுப்பு வலி நீங்கும். சிறுநீரக நோய்கள் நீங்கும்.
6. வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகி வயிற்று ஊளைச்சதை குறையும்.
7. அஜீரணம், வயிற்று வலி நீங்கும்.

இது ஒரு அற்புதமான ஆசனம். வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். அஜீரணம், மலச்சிக்கல் நீங்கும். மார்பு பலம் பெறும். மார்புச்சளி, சைனஸ், ஆஸ்துமா, ஈசினோபீலியா, இருமல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். சிறுநீரகம் சுறுசுறுப்பாக வேலை செய்யும். சிறுநீரக கோளாறு நீங்கும். முதுகுவலி நீங்கும். தொப்பை, ஊளைச்சதை முற்றிலும் குறையும். இளமையும், சுறுசுறுப்பும் உண்டாகும்.

உடல் ரீதியான பலன்கள் :

உடலை மெலிய வைத்து சுறுசுறுப்பாக இருக்க செய்கிறது
இடுப்பை வளைக்க உதவும் ரெக்டி தசைகள் நன்கு ஆரோக்கியம் அடைகின்றன.

வயிற்றுப் பகுதியில் உள்ள அதிகக் கொழுப்பு கரைகிறது
இரத்தக்குழாய் சுத்தமடையும்
முதுகெலும்பு நன்கு வலுப்பெறும்.

அட்ரினல் சுரப்பி நன்கு வலுப்பெறும்
அடிவயிற்றுக்கு நல்ல அழுத்தம் கிடைத்து, மலம் மலக் குடலுக்கு தள்ளப்படும்.
இனப் பெருக்க மண்டலம் வலிமை பெறும்.

குணமாகும் நோய்கள் :

சுவாசக் கோளாறுகள், முதுகு வலி, மூட்டு சம்பந்தமானநோய்கள், நீரிழிவு ,இரப்பை, குடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு நல்லது
ஜீரணசக்தியை அதிகப் படுத்துகிறது
மாதவிடாய் பிரச்சனைகள் தீரும் , தூக்கமின்மை விலகும்

ஆன்மீக பலன்கள் :

இது சோம்பலை நீக்கி உடலை இது சுறுசுறுப்பாக்குகிறது.

எச்சரிக்கை :

இதய நோயாளிகள் , குடல் வாயு, அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைச் செய்தல் கூடாது.

யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!! 
 
ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்..!