Sunday, March 8, 2026
HomeUncategorizedவாக்குச்சாவடியில் வாக்களித்த நடிகர் விஜய்

வாக்குச்சாவடியில் வாக்களித்த நடிகர் விஜய்

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில், நடிகர் விஜய் வாக்களித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு காரில் வந்து நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் வாக்களிக்க வந்தபோது அப்பகுதியில் அவரது ரசிகர்கள் கூட்டமாக குவிந்தனர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments