Sunday, March 22, 2026
HomeUncategorizedபட்ஜெட் பிரெண்ட்லி டூர் போகணுமா? அப்போ வால்பாறை தான் பெஸ்ட் ஸ்பாட்!

பட்ஜெட் பிரெண்ட்லி டூர் போகணுமா? அப்போ வால்பாறை தான் பெஸ்ட் ஸ்பாட்!

டூருக்கு போகவேண்டும் என்று ஆசை இருக்கிறதா? அதே சமயம் பட்ஜெட் பிரண்ட்லியாகவும் இருக்க வேண்டும் என்றால் அதற்கு சிறந்த இடம் வால்பாறை தான். வால்பாறை மிகவும் ரம்மியமாகவும். இயற்கை சூழ்ந்த இடமாகவும் இருக்கும்.  அமைதியாக இயற்கை சூழலை ரசிக்க  வேண்டும் என்றால் அதற்கு வால்பாறை ஒரு பெஸ்ட் ஸ்பாட். கண்டிப்பாக ஒருமுறையாவது பார்க்க வேண்டிய இடங்களில் இந்த இடமும் ஒன்று.

 வால்பாறை எங்கு உள்ளது 

 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் ஐயர் பாடி வழியாக சென்றால் வால்பாறை என்னும் அற்புதமான இயற்கை நிறைந்த இடத்தை அடையலாம்.

விமானம் மூலம் பயணிக்க நினைப்பவர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் விமான நிலையம் அடைந்து அங்கிருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் வால்பாறை அமைந்துள்ளது. உங்கள் நகரத்திலிருந்து ரயில் மூலம் பயணிக்க விரும்புபவர்கள் அருகில் உள்ள ரயில் நிலையம் பொள்ளாச்சியாகும். பொள்ளாச்சியில் இருந்து நாம் வால்பாறைக்கு பேருந்து மற்றும் வாடகை வண்டிகள் மூலம் வால்பாறையை அடையலாம்.

 
 பொள்ளாச்சி ஆழியார் அணை அட்டகத்தி நீர்வீழ்ச்சி ரொட்டி கடை வால்பாறை என்னும் வழிதடமே  நீங்கள் எளிதில் அடைய தக்க வழித்தடம் ஆகும். சின்னக்கல்லார் அருவி சோலையார் அணை புல் கொன்று ஆகியவை வால்பாறையின் மிக முக்கியமான அம்சமாகும். ஆழியாறு ஆனைமலை பொள்ளாச்சி ஆகியவை செல்லும் வழியில் இருக்கும் சுற்றுலா தலங்கள் ஆகும். சின்னக்கல்லார் அருவி வால்பாறையில் அமைந்துள்ளது. இந்த சொத்துல பயணிகள் வருவதற்கு ஒரே காரணம் இந்த அறிவியும் ஆகும். அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் நடந்து சென்று இந்த அருவியை காண்பது மிக அழகிய சுற்றுலா தலமாகும் இதை சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புகிறார்கள்.

 சோலையாறு அணை 

 சோலையார் அணையின் வால்பாறையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில்
 அமைந்துள்ளது இந்த அதை ஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான அணையாகும். எங்க சுற்றுலா பயணிகள் சோலையார் அணையில் பிரம்மாண்டமான தோற்றத்தையும் நீரோடைகளையும் பார்க்க படையெடுத்து வருகிறார்கள்.

 ஆழியாறு

 வால்பாறையில் இருந்து 38 கிலோமீட்டரும் ,பொள்ளாச்சியில் இருந்து 24 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஆழியார் அணை. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும்போது இது முக்கிய சுற்றுலா தலமாக பார்க்கப்படுகிறது. இந்த பிரம்மாண்டமான அணையின் உயரம் 81 அடியாகும். அதுமட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கு பிடித்த புலிகள் சரணாலயமும் உள்ளது.

இத்தனை இயற்கை காட்சிகளும்  உள்ள வால்பாறையை காண சுற்றுலா பிரியர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments