நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. இப்படத்தில் நடிகை சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், சமுத்திரகனி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ‘வாத்தி’ திரைப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நேற்று டிரைலர் வெளியானது.
இந்த டிரைலரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். வலைத்தளங்களில் கமென்டுகளையும் பதிவிட்டவண்ணம் உள்ளனர்.

