Saturday, February 14, 2026
Homeஆன்மீகம்வந்தாரை வாழவைக்கும் வடபழனி முருகன் !- சிறப்பு ஆன்மீக தகவல்கள்!

வந்தாரை வாழவைக்கும் வடபழனி முருகன் !- சிறப்பு ஆன்மீக தகவல்கள்!

சென்னை வடபழநி ஆண்டவரின் அதிசய கோலம்! 

குன்றுதோறும் குடியிருக்கும் குமர கடவுள் குன்றுகள் இல்லாமல் சாதாரணமான தலங்களிலும் காட்சியளிக்கக்கூடிய பல்வேறு முருகப்பெருமான் ஆலயங்கள் தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் அமைந்திருக்கின்றன..

வடபழனி கந்தகோட்டம் திருச்செந்தூர் இலஞ்சி போன்ற பல்வேறு முருகப்பெருமான் ஆலயங்கள் சாதாரணமான தரைப்பகுதியில் அமைந்திருக்கின்றன..

இப்போது நாம் தரிசிக்கும் வடபழனி முருகப்பெருமான் ஆலயத்தின் அற்புதங்களை இந்த பதிவில் காண்போம்..

பொதுவாக நாம் தரிசிக்கும் முருகப்பெருமான் திருவுருவங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் ஒரு அபூர்வமான காட்சியைக் காணலாம்.

 பாதரட்சை அணிந்த பரமன்!

இந்தத் தலத்தின் ஆகச்சிறந்த விசேஷமே, முருகப்பெருமான் தனது திருவடிகளில் பாதரட்சை (காலணி) அணிந்த நிலையில் அருள்பாலிப்பதுதான்.

 வலது பாதம் முன்னே வைத்த கோலம்:

சுவாமி தாமரைப் பீடத்தின் மீது நின்றிருந்தாலும், அவர் சும்மா நிற்கவில்லை! தனது வலது பாதத்தை ஒரு அடி முன்னெடுத்து வைத்து, “உனக்காக நான் வருகிறேன்” என்று அபயம் அளிப்பது போலவும், பக்தர்களுக்கு அருளை வாரி வழங்க விரைந்து வருவது போலவும் இந்தக் கோலம் அமைந்துள்ளது.

 ஏன் வடபழநிக்குச் செல்ல வேண்டும்?

என்ற ஒரு கேள்வி நமக்குள் எழலாம்..

இந்த வடபழனி திருத்தலம்

பழநிக்கு நிகரான தலம்: பழநி வரை செல்ல முடியாதவர்கள், சென்னையில் உள்ள வடபழநி ஆண்டவரைத் தரிசித்தால் அதே பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.

தொழில் வெற்றி: புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் மற்றும் வியாபாரம் விருத்தியடைய வேண்டுபவர்களுக்கு வடபழநி முருகன் ஒரு பெரும் வழிகாட்டி.

அங்காரக தோஷ நிவர்த்தி: முருகனுக்கு மிகவும் பிடித்த செவ்வாய் (அங்காரகன்) பகவானுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது ஒரு தனிச்சிறப்பு.

 பக்தியின் தொடக்கம்:

அண்ணாசாமி தம்பிரான் என்ற பக்தர், பழநியிலிருந்து முருகனின் படத்தை வாங்கி வந்து சிறிய கொட்டகையில் வைத்து வழிபடத் தொடங்கியதுதான் இன்று சென்னை மாநகரின் அடையாளமாகத் திகழும் இந்த பிரம்மாண்ட ஆலயம்.

நேரம்:  காலை 5:00 மணி முதல் 12:00 மணி வரை மற்றும் மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்..

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் முருகப்பெருமானை தரிசனம் செய்து வாழ்வில் அனைத்து நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்…

அறந்தாங்கி சங்கர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments