Home Uncategorized வெற்றிப்பேரணி செல்ல பிரதமர் மோடி திட்டம்

வெற்றிப்பேரணி செல்ல பிரதமர் மோடி திட்டம்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ., கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வென்று, நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துக்கணிப்பு முடிவுகள் சாதகமாக வந்துள்ளதால் பா.ஜ., தரப்பு குஷியாகியுள்ளது. நாளை ஓட்டு எண்ணிக்கையின்போது மாலைக்குள் பெரும்பான்மை நிலவரம் கிட்டத்தட்ட தெரிந்துவிடும்.

முடிவுகளில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகும் பட்சத்தில் நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் இல்லத்தில் இருந்து பா.ஜ., தலைமை அலுவலகம் வரை தொண்டர்கள் மத்தியில் வெற்றிப்பேரணி செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

இந்த பேரணியில் பா.ஜ.,வினர் பெருமளவு கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version