விக்ரம் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “வீர தீர சூரன்” திரைப்படத்தின் இரண்டாவது பாடல் “ஆதி அடி ஆதி” வரும் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது. ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படக்குழு இப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளது. முதல் பாடல் “கல்லூரும்” ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
