அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் டைரக்ஷனில் விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வீரமே வாகை சூடும்’.
இப்படத்தில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் விஷாலுடன் ஒர்க் பண்ணி இருக்காய்ங்க.
விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிச்சு வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஹைதராபாத்திலும் சில காட்சிகளை சென்னையிலும் படமாக்கி வந்த நிலையில் இன்னியோட ஷூட்டிங் முடிச்சு கேக் வெட்டி பூசணிக்காய் ஒடைச்சு நிறைவு செஞ்சாய்ங்க
தற்போது அனைத்துப் பணிகளையும் முடித்து இப்படத்தை வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று திரையரங்குகளில் வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவிச்சிருந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதியே வெளியிடலாமா என்ற ஆலோசனை நடைபெற்று வருதாம்

