Home Uncategorized விஜய்யுடன் இணைந்து படம் இயக்குவேன் – இயக்குனர் ஹரி

விஜய்யுடன் இணைந்து படம் இயக்குவேன் – இயக்குனர் ஹரி

தமிழ், சாமி, சிங்கம் என பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய 
இயக்குனர் ஹரி, தற்போது தனது மைத்துனரும், நடிகருமான அருண் விஜய் வைத்து  யானை என்ற வெற்றிப்படத்தினை தற்போது கொடுத்துள்ளார். இந்தப் படம் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். 

நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில், விஜய் இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் ஹரி “விஜய்யை வைத்து படம் இயக்கும் ஆசை உள்ளது. அவரை பல முறை சந்தித்து இருக்கிறேன். பல கதைகள் கூறியுள்ளேன் வருங்காலத்தில் விஜய்யை வைத்து நிச்சயம் படம் இயக்குவேன்” என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version