Tuesday, March 10, 2026
HomeUncategorizedவில்லியாக நடிக்க விரும்பும் கமல்ஹாசன் மகள்

வில்லியாக நடிக்க விரும்பும் கமல்ஹாசன் மகள்

நடிகை சுருதிஹாசன் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, என்னை வில்லியாக பார்க்க ஆசைப்படுவதாக பலர் தெரிவித்து உள்ளனர். எனக்கும் வில்லி வேடத்தில் நடிக்க ஆசையாக உள்ளது. ஏதோ வில்லியாக நடித்தோம் என்று இல்லாமல் நல்ல கதை, கதாபாத்திரமாக அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

எந்த வருடத்தில் வந்த இசை சிறப்பானது என்று என்னிடம் கேட்டால் ஒவ்வொரு காலத்திலும் நல்ல இசையை கேட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆனால் 70-களில் வந்த இசைதான் மிகவும் சிறப்பானது என்று சொல்வேன். அதிர்ஷ்டத்தை விட அதிகமாக கடின உழைப்பைத்தான் நம்புகிறேன். 

நல்ல வாய்ப்புகள் வருவதையும் நம்புகிறேன். வாழ்க்கையில் தினமும் ஒரு புதிய பாடம் கற்றுக்கொண்டு இருக்கிறேன். வாழ்க்கை கஷ்டமானது, அழகானது. எனக்கு இப்போது ரொம்ப அழகாக இருக்கிறது. ஏதாவது கஷ்டம் வந்தால் அதில் இருந்து மீள கடவுளை பிரார்த்திப்பேன். நண்பர்களுடன் பேசுவேன். 

சில நேரம் அழுவேன். அந்த கண்ணீரில் கஷ்டம் மறைந்து போகும். நேர்மையாக இருப்பதுதான் மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதை கற்றுக்கொண்டேன்” என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments