இது குறித்து கூட்டத்தல் அண்ணாமலை பேசுகையில், சட்டமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக உறுப்பினர்கள் இல்லாமல் இருந்தனர். தற்போது 4 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். உள்ளாட்சி தேர்தலில் நமது கட்சி சார்பில் அனைத்து பொறுப்புகளுக்கும் போட்டியிட உள்ளனர். இதற்கு நாம் இன்றிலிருந்து 3 மடங்கு உழைக்க வேண்டும்.
10 வருடமாக எதிர்க்கட்சியாக இருந்த திமுக எதுவும் செய்யாமல், மற்ற கட்சிகளை குறைகூறி தற்போது ஆட்சிக்கு வந்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்கும் அரசு, எதற்காக டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும்? எனவே, எந்த அரசு தடுத்தாலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறேன்.” என்று கூறினார்.

