இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது.
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய 2ஆவது தளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் அமைப்பதன் முன்னோட்ட திட்டத்துக்காக பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
ஸ்பேடெக்ஸ் திட்டத்திற்கான Chaser, Target ஆகிய இரண்டு விண்கலங்களும் வெற்றிகரமாக பிரிந்தது.
நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பவும் இந்த தொழில்நுட்ப பரிசோதனை உதவும் என இஸ்ரோ அறிவிப்பு
