Home Uncategorized விண்வெளி மையத்தில் சிக்கி உள்ள சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளி மையத்தில் சிக்கி உள்ள சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளி மையத்தில் சிக்கி உள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் திரும்ப நாசா ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அனுப்பப்படும் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் மட்டுமே இருவரும் பூமிக்கு திரும்ப முடியும். இதனால் சுனிதா வில்லியம்சின் 8 நாள் விண்வெளி பயணம் 8 மாதமாக நீடித்துள்ளது.

1965 இல் பிறந்த முன்னாள் அமெரிக்க கடற்படை விமானிக்கு செப்டம்பர் 19 அன்று 59 வயதாகிறது. இந்நிலையில், நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தனது பிறந்தநாளை விண்வெளி கொண்டாட உள்ளார். ஆனால், இது முதல் முறை அல்ல. இதற்கு முன் சுனிதா வில்லியம்ஸ் தனது 47வது பிறந்தநாளை 2012 ஆம் ஆண்டு ISS இல் தங்கியிருந்த போது கொண்டாடினார்.

Exit mobile version