Sunday, March 8, 2026
HomeUncategorizedவிரைவில் "வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2"

விரைவில் “வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2”

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில் 2013-ல் வெளியாகி அமோக வெற்றிபெற்ற படம்.

பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் ரஜினி முருகன், சீமராஜா படங்கள் வந்தாலும், முதல் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஒரு தனி இடத்தை பிடித்தது. இந்தப் படத்தின் 2ஆம் பாகம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்தப் படத்தின் இயக்குநர் பொன்ராம்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ வருவது உறுதி என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “சிவகார்த்திகேயன் சார் மெச்சூரிட்டி ஆகிவிட்டார், அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ எடுப்போம் என தெரிவித்துள்ளார்.  தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார். இதனையடுத்து அவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படத்தை இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments